/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரச்னை ஒன்பது... தீர்வு என்பது எப்போது?
/
பிரச்னை ஒன்பது... தீர்வு என்பது எப்போது?
ADDED : அக் 02, 2024 06:37 AM

தெருவிளக்கு தெரியவில்லை
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, டி.எஸ்.ஆர்., லே அவுட், 4 வது வீதியில் தெருவிளக்கு கம்பத்தையொட்டி மரக்கிளைகள் வளர்ந்துள்ளதால், வீதியில் வெளிச்சம் தெரிவதில்லை.
- மனோகர், கொங்கு மெயின் ரோடு
ஆக்கிரமிப்பை அகற்றலாமே!
திருப்பூர், பாண்டியன் நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனி நபர் வீட்டின் உபயோகத்துக்காக சட்ட விரோதமாக தண்ணீர் தொட்டி வைத்துள்ளனர். ரோட்டை ஆக்கிரமித்து அறையும் கட்டியுள்ளனர்.
- கோபிநாத், பாண்டியன் நகர்
குண்டும் குழியுமான ரோடு
அவிநாசி, மடத்துப்பாளையம் முதல் செம்மாண்டம்பாளையம் வரை செல்லும் பகுதியில் உள்ள ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அகலப்படுத்தி தார் ரோடு போட வேண்டும்.
- நடராஜன், அவிநாசி.
தெருநாய் தொல்லை
பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, மீனாம்பாறையில் தெருநாய்கள் ஏராளமானவை சுற்றி வருகிறது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல முடியாத சூழலில் உள்ளனர்.
- செல்வராஜ், மீனாம்பாரை.
குடிநீர் வீணாகுது
திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டு சாமுண்டிபுரத்தில் குடிநீர் குழாயின் வால்வு மாற்றப்படாததால், தினமும் குடிநீர் வீணாகி வருகிறது.
- ரவிக்குமார், சாமுண்டிபுரம்
தெருவிளக்கு எரியவில்லை
திருப்பூர், குமார் நகரில், இருந்து வலையங்காடு செல்லும் ரோட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
- ராஜா, வளையன்காடு.
தடுமாறும் வாகன ஓட்டிகள்
திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் அருகே வளர்ச்சி பணிகளுக்காக தோண்டப்பட்டு, மூடப்பட்டது. ரோடு போடாத காரணமாக குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
- கணேஷ், பங்களா ஸ்டாப்.
போக்குவரத்து நெரிசல்
திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ரயில்வே கூட்செட்டுக்கு வரும் லாரிகள், முதல் ரயில்வே கேட் அருகே அபாயகரமாக திருப்பி வருகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
- முருகன், பாளையக்காடு
ரியாக் ஷன்
--------------
ரோடு சீரமைக்கப்பட்டது
திருப்பூர் பி.என்., ரோடு பூலுவபட்டியில் ரோடு மோசமாக இருந்தது. 'தினமலர்' செய்தால், தற்போது, சீரமைக்கப்பட்டு, தார் ரோடு போடப்பட்டுள்ளது.
- மனோகரன், பூலுவபட்டி