/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு பஸ் செல்லும் சாலை சீரமைக்காததால் சிக்கல்
/
சிறப்பு பஸ் செல்லும் சாலை சீரமைக்காததால் சிக்கல்
ADDED : அக் 16, 2025 11:32 PM

திருப்பூர்: சிறப்பு பஸ் இயக்கப்படும் சாலை சீரமைக்கப் படாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்பு பஸ் இயக்கம் இன்றிரவு முழுமையாக துவங்கும் நிலையில், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி, கம்பம் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கம் போக்குவரத்து வசதிகளுக்காக மாற்றப்பட்டுள்ளது.
புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் சிறப்பு பஸ்கள், போயம்பாளையம், பூலுவபட்டி நால்ரோடு சிக்னல் வழியாக நெருப்பெரிச்சல், வாவிபாளையம் சென்று கூலிபாளையம், நல்லுார் வழியாக பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்பு பஸ்கள் வழித்தடம் மாற்றப்பட்டுள்ள நிலையில், பஸ்கள் பயணிக்கும் வழித்தடம் மழைக்கு சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தால், மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. திருப்பூரில் இருந்து திருச்சி, மதுரை மார்க்கமாக, 150க்கும் அதிகமான பஸ்கள் இயங்க உள்ளன.
இன்றும், நாளையும் பெருமாநல்லுார், பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், செட்டிபாளையம், அங்கேரிபாளையம், அண்ணா நெசவாளர் காலனி பகுதியில் இருந்து நகருக்குள் அதிக வாகனங்கள் வந்து திரும்பும். இச்சூழலில் சாலை இவ்வாறு உள்ளது, வாகன ஓட்டிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.