/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மொபைல் போன்களால் விபத்து அதிகரிப்பு'
/
'மொபைல் போன்களால் விபத்து அதிகரிப்பு'
ADDED : அக் 16, 2025 11:33 PM

பல்லடம்: பல்லடம் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் நலச்சங்க ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம், தனியார் மண்டபத்தில் நடந்தது.
போக்குவரத்து எஸ்.ஐ., பார்த்திபன் பேசியதாவது:
போக்குவரத்து விதி மீறல்களால், பல்லடத்தில் நடந்த விபத்துகளில், நிறைய உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நாம் செய்யும் சிறு தவறாலும், பெரும் விபத்து ஏற்பட்டுவிடும். எவ்வாறு உடல் உறுதி தேவையோ, அதுபோல், வாகனங்களுக்கும் உறுதிச் சான்று அவசியம்.
காப்பீடு என்பது நமக்கானது அல்ல; நம்மைச் சார்ந்த குடும்பத்துக் கானது. மது அருந்தி விட்டும், காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டும் வாகனங்களை ஓட்டக்கூடாது.
பெரும்பாலான விபத்துகளுக்கு, வாகனங்களை இயக்கும்போது மொபைல்போன் பயன் படுத்துவதுதான் காரணமாக உள்ளன.
விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் வாகனம் ஓட்டுங்கள். இவ்வாறு, பார்த்திபன் கூறினார்.
ஆட்டோ டிரைவர்கள், தங்கள் குறைகளை போலீசாரிடம் தெரிவித்தனர். நிவர்த்தி செய்து தருவதாக போலீசார் உறுதி கூறினர்.