/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தி ஊர்வலம்
/
பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தி ஊர்வலம்
ADDED : ஜூலை 28, 2025 10:49 PM
திருப்பூர்; நிபந்தனை பட்டா நிலங்களை மீட்க கோரி, பஞ்சமி நில மீட்பு கூட்டியக்கம் சார்பில், திருப்பூர் தென்னம்பாளையம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை நேற்று ஊர்வலம் நடைபெற்றது.
பஞ்சமி நில மீட்பு கூட்டியக்க பொதுச்செயலாளர் சித்தார்த்தன் ஊர்வலத்தை துவக்கிவைத்தார்.
தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஞ்சமி நில மீட்பு கூட்டியக்க மாநில ஒருங்கிணைப்பாளர் (வி.சி.க.,) தமிழ்வேந்தன் தலைமை வகித்தார்.
'பஞ்சமி நிலங்களின் நிபந்தனை பட்டாவை, வேறு நபர்கள் கிரயம் செய்ததை ரத்து செய்யவேண்டும். நிபந்தனை பட்டாவை, சாதாரண பட்டாவாக மாற்றிக்கொடுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு, உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்கவேண்டும்,' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, கலெக்டரை சந்தித்து பஞ்சமி நிலங்களை மீட்க கோரி மனு அளித்தனர்.