/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தயாரிப்பு - காலாவதி தேதி மாற்றும் வகையில் பாக்கெட்
/
தயாரிப்பு - காலாவதி தேதி மாற்றும் வகையில் பாக்கெட்
தயாரிப்பு - காலாவதி தேதி மாற்றும் வகையில் பாக்கெட்
தயாரிப்பு - காலாவதி தேதி மாற்றும் வகையில் பாக்கெட்
ADDED : நவ 11, 2024 07:16 AM

பல்லடம் : உணவுப்பொருள் பாக்கெட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்பது உணவு பாதுகாப்பு விதிமுறையாகும். சில பாக்கெட் உணவுகளில் இது போன்ற விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.
சில கடைகளில் கெட்டுப்போன காளான் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, மேற்கு பல்லடத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
பல்லடத்திலுள்ள மளிகை கடை ஒன்றில் பாக்கெட் காளான் வாங்கி, வீட்டில் சென்று பிரித்துப் பார்த்தபோது, அது பூஞ்சை பிடித்து கெட்டுப் போயிருந்தது.
தயாரிப்பு தேதி இன்றி, காலாவதி தேதி மட்டும், மையினால் எழுதப்பட்டிருந்தது. கடை உரிமையாளரிடம் இது குறித்து கேட்டதற்கு, 'தேவையெனில் வாங்குங்கள். இல்லையெனில் விட்டுவிடுங்கள்.
வியாபார நேரத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்றார். மேலும், 'உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளிப்பேன்' என்று கூறியதற்கு, 'தாராளமாக புகார் அளித்துக் கொள்ளுங்கள்.
இது, நாங்கள் தயாரிப்பதல்ல. அப்படியும் வந்து கேட்டால், குப்பையில் போட்டு விடுவோம். எங்களை வேறு எதுவும் செய்ய முடியாது' என்றார். குழந்தைகள் - பெரியவர்கள் உட்பட அனைவரும் சாப்பிடும் உணவுப் பொருட்களை, இவ்வாறு தரம் இன்றி விற்பனை செய்வது உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கும்.
தயாரிப்பு - காலாவதி தேதியை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு, சில பாக்கெட் உணவு பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இது குறித்து ஆய்வு செய்து, இது போன்ற உணவுப் பொருட்களை முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.