/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைந்ததால் லாபம்! நிட்டிங் துணி இறக்குமதி
/
குறைந்ததால் லாபம்! நிட்டிங் துணி இறக்குமதி
ADDED : நவ 25, 2024 11:03 PM
திருப்பூர்; சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து, சாயமிடப்பட்ட பின்னல் துணி இறக்குமதி நாளுக்கு நாள் அதிகரித்தது. முழுமையான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்ததால், உள்நாட்டில் உற்பத்தியான துணிகளை காட்டிலும் விலை குறைவாக கிடைத்தது. உள்நாட்டு பின்னல் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், துணி இறக்குமதி தொடர்ந்து அதிகரித்தது.
உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. முதல் கட்டமாக, ஐந்து வகையான பின்னல் துணி இறக்குமதிக்கு வரிவிதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதம் முன், மேலும் எட்டு வகையான துணி இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட்டது. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளை காட்டிலும், சாயமிடப்பட்ட பின்னல் துணி இறக்குமதி சரிந்துள்ளது. கடந்த செப்., மாதம், எட்டு ரகங்களுக்கு வரி விதிக்கப்பட்டதால், இரண்டு மாதமாக, பின்னல் துணி இறக்குமதி குறைந்துள்ளது.
கடந்த, 2020ல், ஏப்., - செப்., வரையிலான ஆறு மாதத்தில், 3.87 கோடி யூனிட்டுகளாக இருந்த துணி இறக்குமதி, 2021ல் 7.18 யூனிட்டுகளானது. 2022ல், 9.09 கோடி யூனிட்டுகளாகவும், 2023ல், 10.87 கோடி யூனிட்டுகளாகவும் உயர்ந்தது. இது, கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், நட ப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாதங்களில், 1.96 சதவீதமாக குறைந்துள்ளது.