/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளுக்கான ஆண்டுமலர் சாதனைகளை தொகுத்து வழங்க திட்டம்
/
அரசு பள்ளிகளுக்கான ஆண்டுமலர் சாதனைகளை தொகுத்து வழங்க திட்டம்
அரசு பள்ளிகளுக்கான ஆண்டுமலர் சாதனைகளை தொகுத்து வழங்க திட்டம்
அரசு பள்ளிகளுக்கான ஆண்டுமலர் சாதனைகளை தொகுத்து வழங்க திட்டம்
ADDED : ஜன 11, 2025 09:35 AM
உடுமலை, : அரசுப்பள்ளிகளின் சாதனைகளை பட்டியலிட்டு, ஆண்டுமலர் தயாரிக்க கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளில் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும், அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில்,அரசு துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள பள்ளிகளில், மாணவர்களின் சாதனை, பள்ளியின் பெருமை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விருதுகளை தொகுத்து, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஆண்டுமலர் தயாரிப்பதற்கு, கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த பள்ளிகளின் சாதனைகள், விருதுகள் குறித்து பட்டியலிட்டு, விபரங்களை கல்வித்துறைக்கு அனுப்புவதற்கு கல்வித்துறை அலுவலர்கள் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு மாவட்டத்திலும், இதுபோல் ஆண்டுமலர் தயாரிக்க பணிகள் நடக்கிறது. ஒவ்வொரு பள்ளியில் உள்ள சாதனைகள் குறித்தும், பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியலிட்டு விபரங்களை அனுப்ப வேண்டும்.
அதில் ஆண்டுமலரில் இடம்பெற போகும் சாதனைகளை, மாவட்ட அளவிலான சிறப்பு குழுவினர் முடிவு செய்து, புத்தகம் தயாரிக்கப்படும். தற்போது தலைமையாசிரியர்களுக்கு சாதனைகளை அனுப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.

