/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் அருகே மின்மயானத்துக்கு எதிர்ப்பு; கழுகரை மக்கள் போராட்டம்
/
கோவில் அருகே மின்மயானத்துக்கு எதிர்ப்பு; கழுகரை மக்கள் போராட்டம்
கோவில் அருகே மின்மயானத்துக்கு எதிர்ப்பு; கழுகரை மக்கள் போராட்டம்
கோவில் அருகே மின்மயானத்துக்கு எதிர்ப்பு; கழுகரை மக்கள் போராட்டம்
ADDED : ஜூன் 16, 2025 08:33 PM

உடுமலை; கோவில் அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கழுகரை பகுதி மக்கள் போராட்டம் நடத்தி, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மடத்துக்குளம் பேரூராட்சி, 5வது வார்டுக்குட்பட்ட பகுதி கழுகரை. அங்குள்ள மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும்.
கோவில் அருகே, ஆண்டுதோறும் திருவிழாவையொட்டி, மக்கள் பூவோடு எடுக்கும் மற்றும் கொடியேற்றம் நடைபெறும் இடம் அமைந்துள்ளது. அவ்விடத்தின் அருகில், பேரூராட்சி நிர்வாகத்தினர் மின்மயானம் கட்ட இடம் தேர்வு செய்துள்ளனர்.
அப்பகுதியில், அங்கன்வாடி மையமும், அரசுப்பள்ளி, ரேஷன் கடையும் உள்ளது.இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை கோவில் அருகில், நுாற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்டவர்கள் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்து, மடத்துக்குளம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மக்கள், மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர்.
மக்கள் கூறுகையில், 'பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வகையில், மின்மயானம் கட்ட மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் இடம் தேர்வு செய்துள்ளனர். வேறு இடத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் வரை, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.
மக்களின் தொடர் போராட்டத்தால், அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது. இப்பிரச்னை குறித்து, உடனடியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.