/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்ட வலுக்கிறது எதிர்ப்பு; மாநகராட்சி முன் நாளை ஆர்ப்பாட்டம்
/
குப்பை கொட்ட வலுக்கிறது எதிர்ப்பு; மாநகராட்சி முன் நாளை ஆர்ப்பாட்டம்
குப்பை கொட்ட வலுக்கிறது எதிர்ப்பு; மாநகராட்சி முன் நாளை ஆர்ப்பாட்டம்
குப்பை கொட்ட வலுக்கிறது எதிர்ப்பு; மாநகராட்சி முன் நாளை ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 13, 2025 11:52 PM
அனுப்பர்பாளையம்; மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஜி.என்., கார்டன் பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் அடுத்த ஜி.என்., கார்டன் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படும். சுகாதாரக்கேடு ஏற்படும். எனவே இங்கு குப்பை கொட்ட கூடாது. என அப்பகுதி பொது மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர், பத்திர எழுத்தர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவர்கள் குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி கருப்பு கொடியேந்தி போராட்டம், குப்பை லாரி சிறைப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுக்காப்புடன் மாநகராட்சி நிர்வாகம் அங்கு குப்பை கொட்டி வருகிறது.
இந்நிலையில், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் நடத்திய ஆலோசனையின்படி நாளை காலை மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.