/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்ட எதிர்ப்பு 24ல் ஆர்ப்பாட்டம்
/
குப்பை கொட்ட எதிர்ப்பு 24ல் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2025 12:51 AM
அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பத்திர பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
''குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை. எனவே, குப்பை கொட்டக்கூடாது'' என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டம் ஜி.என்., கார்டன் சக்தி மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மா.கம்யூ., - இ.கம்யூ., - கொ.ம.தே.க., - தே.மு.தி.க., - பா.ஜ., - த.வெ.க., மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே, கொட்டப்பட்டுள்ள குப்பை மீது முழுவதுமாக மண்ணை நிரப்பி சமன்படுத்திட வேண்டும். ஜி.என். கார்டன் பகுதி மக்களின் உடல் நலன் மற்றும் சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.
திருப்பூர் நகரத்தில் குப்பை மேலாண்மை திட்டத்தை முறைப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு ஜி.என்., கார்டன் பஸ் ஸ்டாப் அருகில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.