/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு; மக்கள் காத்திருப்பு போராட்டம்
/
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு; மக்கள் காத்திருப்பு போராட்டம்
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு; மக்கள் காத்திருப்பு போராட்டம்
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு; மக்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 08, 2025 12:32 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் அடுத்த ஜி.என்., கார்டன் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்படுகிறது.
''குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை. இங்கு குப்பை கொட்டக் கூடாது'' என்று அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, போலீஸ் துணையுடன் மாநகராட்சி நிர்வாகம் அங்கு குப்பை கொட்டி வருகிறது.
நேற்று அப்பகுதி பொதுமக்கள், அனைத்து கட்சியினர் மற்றும் பத்திர எழுத்தர்கள் ஆகியோர் ஜி.என்., கார்டன் பஸ் ஸ்டாப் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் அமர மேற்கூரை அமைக்கவோ, பேசுவதற்கு ஒலி பெருக்கி வைத்து கொள்ளவோ போலீசார் அனுமதி வழங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டோர் ஆங்காங்கே மர நிழல் மற்றும் கடை முன் இருந்த கூரையின் கீழ் அமர்ந்து இருந்தனர். நேற்று இரவு வரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.