/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி உயர்வு எதிர்த்து போராட்டம்: காங்., முடிவு
/
சொத்து வரி உயர்வு எதிர்த்து போராட்டம்: காங்., முடிவு
சொத்து வரி உயர்வு எதிர்த்து போராட்டம்: காங்., முடிவு
சொத்து வரி உயர்வு எதிர்த்து போராட்டம்: காங்., முடிவு
ADDED : நவ 24, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூரில் காங்., தேசிய செயலாளர் கோபிநாத் கூறியதாவது:
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை உள்ளது. அதற்கேற்ப கட்சியை வலுப்படுத்தும் பணியை நாங்கள் செய்கிறோம். இந்த ஆசையை நிறைவேற்றும் பணியை கட்சி தலைமை உரிய நேரத்தில், உரிய இடத்தில் செய்யும். தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. சில இடங்களில் கொள்கை மாறுபாடு, செயல்பாடுகளில் குறைபாடு இருக்கும். அதை கூட்டணி கட்சி என்ற நிலையில் கட்டாயம் சுட்டிக் காட்டுவோம்.திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி உயர்வு கண்டித்தும், அடிப்படை வசதிகள் மேம்பாடு வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.