/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீமான் கைது கண்டித்து போராட்டம்: 50 பேர் கைது
/
சீமான் கைது கண்டித்து போராட்டம்: 50 பேர் கைது
ADDED : ஜன 01, 2025 05:40 AM

திருப்பூர் : சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் கைது செய்யப்பட்டார்.
சீமான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்னா மனோகர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட, 50 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, திருப்பூர் குமரன் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாநில தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சுரேஷ்பாபு, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ேஷக் முகமது உட்பட பலர் பங்கேற்றனர்.
பின், மறியல் செய்ய முயன்ற அவர்களை போலீசார் கைது செய்து, காவேரி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.