/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆவேசம்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆவேசம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆவேசம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆவேசம்
ADDED : ஜூலை 11, 2025 11:37 PM

உடுமலை, ;முன்னறிவிப்பு இல்லாமல், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் சங்க கொடி கம்பத்தை நகராட்சி அதிகாரிகள் அகற்றியதாக, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் அருகே, தேசிய நெடுஞ்சாலை அருகில், உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலகம் உள்ளது. அலுவலகத்தின் முன், அரசு ஊழியர் சங்கத்தின் கொடிக்கம்பம் மற்றும் ஸ்துாபி இருந்தது.
நேற்று மாலை, நகராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு, கொடிக்கம்பம் மற்றும் ஸ்துாபியை அகற்றினர். முன்னறிவிப்பு இல்லாமல், விதிகளை மீறி, நகராட்சி நிர்வாகத்தினர் இப்பணியில் ஈடுபட்டதாக, அரசு ஊழியர் சங்கத்தினர் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில், ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்த போது, வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், '' கொடிக்கம்பத்தை அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் வழங்கவில்லை. தொழிற்சங்க கொடிக்கம்பங்களை அகற்ற, விதிமுறைகள் இல்லை. விதிமீறலில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில்,அச்சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.