/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிட்கோ' வளாகத்தில் தொடரும் போராட்டம்
/
'சிட்கோ' வளாகத்தில் தொடரும் போராட்டம்
ADDED : செப் 10, 2025 11:53 PM

திருப்பூர்: திருப்பூர் 'சிட்கோ' வளாகத்தில், சுமைப்பணி தொழிலாளர்கள், நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'சிட்கோ' வளாகத்தில் இயங்கும், லாரி சரக்கு போக்குவரத்து அலுவலகத்தில், வெளிமாநில தொழிலாளர் மட்டும் பணிக்கு போதும்; உள்ளூர் தொழிலாளர் பணிக்கு வேண்டாமென, அறிவித்துள்ளனர்.
இதனால், அங்குள்ள தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளான நேற்று, உரிமையார்களிடம், தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசியும் உடன்பாடு எட்டவில்லை. இதனால், வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இரண்டாவது நாளில், வடமாநில தொழிலாளர்களை கொண்டு சரக்கு ஏற்றி, இறக்கும் பணியை துவக்கினர். தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பேச்சுவார்த்தை நடந்தது.
உடன்பாடு ஏற்படாமல், இரண்டாவது நாளாக, வேலை நிறுத்தம் தொடர்கிறது. பிரச்னை தீரும் வரை, மற்றவர்கள் வேலை செய்வதையும் அனுமதிக்க முடியாது,' என்றனர்.