ADDED : அக் 16, 2025 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு, 5,000 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
மாவட்ட செயலாளர் கணேஷ் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட நிர்வாகி கனகராஜ், மாநில செயலாளர் குமார், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சம்பத் ஆகியோர் பேசினர்.