/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் கேட்டு மறியல் போராட்டம்; பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்

ADDED : ஜூலை 16, 2025 08:52 PM

உடுமலை; குடிநீர் தட்டுப்பாட்டைக்கண்டித்து, முருக்கத்திபள்ளம் பகுதியில், மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு நிலவியது.
உடுமலை ஒன்றியம், குரல்குட்டை ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு முருக்கத்திபள்ளம். இக்குடியிருப்புக்கு, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீர் வினியோகிக்கவில்லை.
ஊராட்சி, உடுமலை ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மா.கம்யூ., கட்சியினர், தும்பலபட்டி, எலையமுத்துார் ரோடு சந்திப்பில், காலிக்குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில், ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதித்தது.
'குடியிருப்புக்கு குடிநீர் முறையாக வினியோகிக்கப்படுவதில்லை. அடிக்கடி தட்டுப்பாடு ஏற்பட்டு, புகார் தெரிவித்தாலும், எந்த துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை. குடிநீருக்காக பல கி.மீ., தொலைவு அலைய வேண்டியுள்ளது,' இவ்வாறு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
உடுமலை ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.