/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மதுக்கடை, தனியார் 'பார்'களை அகற்ற கோரி மறியல்; பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார்
/
அரசு மதுக்கடை, தனியார் 'பார்'களை அகற்ற கோரி மறியல்; பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார்
அரசு மதுக்கடை, தனியார் 'பார்'களை அகற்ற கோரி மறியல்; பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார்
அரசு மதுக்கடை, தனியார் 'பார்'களை அகற்ற கோரி மறியல்; பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார்
ADDED : மார் 15, 2024 12:20 AM

உடுமலை;உடுமலையில், குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மற்றும் இரண்டு தனியார் 'பார்' களை அகற்ற வேண்டும், என வலியுறுத்தி பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
உடுமலை தாராபுரம் ரோட்டில், நகராட்சி 4வது வார்டு, யு.எஸ்.எஸ்., காலனி பகுதியில், அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் அமைந்துள்ளது. இதே பகுதியில், இரண்டு தனியார் 'பார்'கள் அமைந்துள்ளன.
அப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள 'கிளப்' உறுப்பினர்களாக உள்ளவர்கள், விளையாட்டு, மதுபானம் அருந்தும் வகையில் (எப்.எல்.,3) உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதோடு, திண்பண்டம் இலவசம், வேட்டி, சட்டை என இலவசங்கள் கொடுத்து 'குடி' மகன்களை கவர்ந்து, மது விற்பனை மையமாக மாற்றியுள்ளனர்.
இதனால், காலை முதலே, நுாற்றுக்கணக்கான 'குடி'மகன்கள் திரண்டு விடுவதோடு, மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் மதுக்கடையிலும், 24 மணி நேரமும், சரக்கு விற்பனை நடக்கிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி, நகராட்சி பள்ளி, வணிக நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள பிரதான ரோடு, மதுக்கடைகளின் மையமாக மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சட்ட விரோத மது விற்பனையை தடுக்கவும், இவற்றை அகற்ற வேண்டும், என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், போலீசாரும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மது ஆசாமிகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து, வீடுகளுக்கு முன் அடி, தடி ரகளையில் ஈடுபட்டதோடு, பெண்கள், குழந்தைகளையும் தாக்கினர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து, அரசு மதுக்கடை மற்றும் தனியார் 'பார்களை' உடனடியாக அகற்ற வேண்டும், என உடுமலை- தாராபுரம் ரோட்டில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் அதிகாரிகள் பல மணி நேரம் பேச்சு நடத்தி, விரைவில் தீர்வு காணப்படும், என பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், உடுமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

