/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிலை வேறு இடத்தில் நிறுவாவிட்டால் போராட்டம்: பா.ஜ.,
/
சிலை வேறு இடத்தில் நிறுவாவிட்டால் போராட்டம்: பா.ஜ.,
சிலை வேறு இடத்தில் நிறுவாவிட்டால் போராட்டம்: பா.ஜ.,
சிலை வேறு இடத்தில் நிறுவாவிட்டால் போராட்டம்: பா.ஜ.,
ADDED : ஏப் 15, 2025 06:17 AM

திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் செரங்காடு மண்டல தலைவர் மந்திராசல மூர்த்தி ஏற்பாட்டில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாநகராட்சி அலுவலக சந்திப்பில் இருந்து, அம்பேத்கர் போட்டோவுடன் ஊர்வலமாக சென்ற பா.ஜ.,வினர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் மலர்க்கொடி, சின்னசாமி, வெள்ளியங்கிரி, பாலு, அருண், கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
''தற்போது உள்ள அம்பேத்கர் சிலை உள்ள இடம், அவரின் புகழுக்கு ஏற்ற இடமாக இல்லை. எனவே, அவருக்கு புதிய சிலை சிறந்த இடத்தில் நிறுவ வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே பா.ஜ., சார்பில் மனு வழங்கியுள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால், பா.ஜ., போராட்டம் நடத்தும்,'' என்று மாவட்ட தலைவர் சீனிவாசன் தெரிவித்தார்.
அவிநாசி
அவிநாசி நகர பா.ஜ., சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், முத்துச்செட்டிபாளையம், சேவூர் ரோடு, சூளை உள்ளிட்ட பகுதிகளில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
அவிநாசி நகரத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நீலகிரி லோக்சபா இணை பொறுப்பாளர் கதிர்வேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காசிக்கவுண்டன் புதுாரில் அம்பேத்கர் ஜெயந்தி விழா அவிநாசி மேற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் பிரபுரத்தினம் தலைமையில் நடந்தது.
ஒன்றிய பொருளாளர் சதீஷ்குமார், பொதுச் செயலாளர் பெரியசாமி, துணைத்தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.