/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பரங்குன்றம் மலை காக்க பிப்., 4ம் தேதி போராட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு
/
திருப்பரங்குன்றம் மலை காக்க பிப்., 4ம் தேதி போராட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு
திருப்பரங்குன்றம் மலை காக்க பிப்., 4ம் தேதி போராட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு
திருப்பரங்குன்றம் மலை காக்க பிப்., 4ம் தேதி போராட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு
ADDED : ஜன 24, 2025 06:40 AM
திருப்பூர்; திருப்பரங்குன்றம் மலையை காக்கும் வகையில், மக்களை திரட்டி பிப்., 4ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக ஹிந்து முன்னணி அறிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், ஹிந்துக்களின் மிக முக்கியமான புனித தலங்களில் ஒன்று. திருப்பரங்குன்றம் மலை, அகநானுாற்றில் முருகன் குன்றம் எனப்படுகிறது. திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரை காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் இதன் சிறப்பை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் மன்னர்கள் ஆட்சியில் இருந்து, இன்றைய ஆட்சியாளர்கள் வரை நிர்வாக ரீதியான ஆவணங்களும், இது முருகன் வீற்றிருக்கும் புனித மலை என்பதற்கான ஆவணங்களும் பல உள்ளன. தற்போது எந்த உரிமையும் இல்லாத இஸ்லாமிய அமைப்புகள், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், அந்த மலையில் உள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்துாரி செய்வோம் என்றும் திட்டமிட்டு மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு, திருப்பரங்குன்றம் மலைக்கு அத்துமீறி சென்றனர். கோவில் முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி மக்கள் மத்தியில் வன்முறையை துாண்டும் விதத்தில் செயல்பட்டனர்.
தி.மு.க.,வை சேர்ந்த மணப்பாறை எம்.எல்.ஏ., அப்துல் சமது, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி ஆகியோர் ஆய்வு செய்வதாக சென்றனர். இருவரும், தி.மு.க., தலைமையின் வழிகாட்டலில் தான் சென்றுள்ளனர் என்பது போலீஸ்துறை அதிகாரிகள், அவர்களை தடை செய்யாமல் விட்டதிலிருந்து அறிய முடிகிறது. எம்.பி., தன்னுடன் வந்த நபர்களுடன், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய முருகன் கோவில் முன்பாக அமர்ந்து அசைவ உணவை சாப்பிட்டனர்.
திட்டமிட்டு மதக்கலவரத்தை துாண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டித்து, திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பிப்., 4ம் தேதி நடத்துகிறது.
ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். கந்தனின் மலையை காக்க ஒன்று சேர்ந்து போராட அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

