/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு திட்ட குளங்களுக்கு நீர் காலம் தாழ்த்தினால் போராட திட்டம்
/
அத்திக்கடவு திட்ட குளங்களுக்கு நீர் காலம் தாழ்த்தினால் போராட திட்டம்
அத்திக்கடவு திட்ட குளங்களுக்கு நீர் காலம் தாழ்த்தினால் போராட திட்டம்
அத்திக்கடவு திட்ட குளங்களுக்கு நீர் காலம் தாழ்த்தினால் போராட திட்டம்
ADDED : ஆக 16, 2025 12:11 AM

அவிநாசி; அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளுக்கு நீர் நிரப்புதல் மற்றும் திட்டம் - 2க்கான செயலாக்கம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் நடந்த இக்கூட்டம் குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
முதலாவது திட்டத்தில், 1,045 குளம், குட்டை களுக்கு தண்ணீர் விடுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது வரை, 800 குட்டைகள் வரை மட்டுமே தண்ணீர் செல்கின்றது. திட்டம் துவங்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் இன்னும், 250 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் செல்லாமல் உள்ளது
இந்தத் திட்டத்திற்காக ஆறு நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஒரு மின் இணைப்பு என்ற வகையில் ஆறு நீரேற்று நிலையங்களுக்கும், ஒவ்வொரு மின் இணைப்புகள் மட்டுமே தரப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒன்றில் பழுது ஏற்பட்டால் குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. கூடுதலாக 2வது மின் இணைப்பு திட்டத்தை இதுவரை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
விவசாயிகள் ஏமாற்றம் அதேபோல திட்டம் இரண்டில் விடுபட்டுள்ள, 1,400 குளம், குட்டைகளுக்கும் நிதி ஒதுக்கி திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்ற ஆவலில் காத்திருந்தோம். தற்போது அறிவிப்பும் வராததால், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், விவசாயிகளும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆக., 22க்குள் தண்ணீர் கடந்த மாதம், 29ம் தேதி அவிநாசி நகராட்சி, பாரதிதாசன் வீதியில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் செயற்பொறியாளரை சந்தித்து பேசும்போது, ''ஆக., 22ம் தேதிக்குள் திட்டம் ஒன்றில், மீதமுள்ள குளம், குட்டைகளுக்கு முழுமையாக தண்ணீர் சேரும்படி நடவடிக்கை எடுப்பதாக,'' உறுதி அளித்தனர்.
அதன்படி, 22ம் தேதிக்குள், 1,045 குளம் குட்டைகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்டுள்ள குளம் குட்டைகளின் திட்ட அறிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிவிக்க வேண்டும் என, கூறினர்.
ஆக., 22ம் தேதிக்கு பின், முதலாவது திட்டத்தின் குளம் குட்டைகளுக்கு தண்ணீர் செல்லாமல் காலம் தாழ்த்தி வந்தால் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.