/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆணவப்படுகொலை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
/
ஆணவப்படுகொலை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருவேல்வேலியில் பொறியாளர் கவின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனைப் பெற்றுத் தரவும் வலியுறுத்தி, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. குமரன் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் அதிகளவில் ஆணவப்படுகொலை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
இதை தடுக்கும் வகையில், சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் விவேக் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டனர்.

