/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜம்புக்கல் மலையை மீட்க 7வது நாளாக போராட்டம்; வழியை மறித்து அமைத்திருந்த கேட் திறப்பு
/
ஜம்புக்கல் மலையை மீட்க 7வது நாளாக போராட்டம்; வழியை மறித்து அமைத்திருந்த கேட் திறப்பு
ஜம்புக்கல் மலையை மீட்க 7வது நாளாக போராட்டம்; வழியை மறித்து அமைத்திருந்த கேட் திறப்பு
ஜம்புக்கல் மலையை மீட்க 7வது நாளாக போராட்டம்; வழியை மறித்து அமைத்திருந்த கேட் திறப்பு
ADDED : டிச 17, 2025 06:23 AM

உடுமலை: உடுமலை அருகே ஜம்புக்கல் மலையை மீட்க வலியுறுத்தி, ஏழாவது நாளாக விவசாயிகள் நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
உடுமலை அருகே, ஆண்டியகவுண்டனுாரில் அரசுக்குச்சொந்தமான, 2,770 ஏக்கர் பரப்பளவில் ஜம்புக்கல் மலை அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகவும், காப்புக்காடாகவும் உள்ள இந்த மலையில், 314 ஏக்கர் நிலம், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு கண்டிசன் பட்டா அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.
இதில், வறட்சி காரணமாக, விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாமல், ஆடு, மாடு மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில்,அரசு விதி மீறியும், போலி ஆவணங்கள் வாயிலாகவும், ஒட்டுமொத்த மலையையும் தனியார் ஆக்கிரமித்துள்ளதோடு, கன ரக வாகனங்கள் வாயிலாக பசுமையான மலையை அழித்து வருகின்றனர்.
பாரம்பரியமாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலையில், மலைப்பகுதி மற்றும் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாத வகையில், 'கேட்' அமைத்து, யாரும் நுழைய முடியாத வகையில் தனியார் ஆக்கிரமித்திருந்தனர்.
அரசுக்கு சொந்தமான மலையை மீட்க வலியுறுத்தியும், போலி ஆவணங்கள் வாயிலாக ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறை, அரசுக்கு சொந்தமான பசுமையான மலையை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தியும், சுற்றுப்புற கிராம விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், கடந்த, 10ம் தேதி முதல், மலையடிவாரத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் ஏழாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஏழு நாட்களாக அரசு துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்த நிலையில், நேற்று உடுமலை மண்டல துணை தாசில்தார் தினேஷ் ராகவன் தலைமையிலான அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மலைவழித்தடத்தை அடைத்து, தனியார் அமைத்திருந்த தடுப்பு கேட்டை திறந்து விட்டனர்.
விவசாயிகள் தரப்பில், மலையை அழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், உள்ளிருக்கும் கன ரக வாகனங்களை பறிமுதல் செய்யவும், ஒட்டுமொத்த மலையையும் மீட்க வேண்டும்.
போலி ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

