/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே வழித்தடம் பகுதியில் பள்ளம்; தொடர் விபத்துகளால் பாதிப்பு
/
ரயில்வே வழித்தடம் பகுதியில் பள்ளம்; தொடர் விபத்துகளால் பாதிப்பு
ரயில்வே வழித்தடம் பகுதியில் பள்ளம்; தொடர் விபத்துகளால் பாதிப்பு
ரயில்வே வழித்தடம் பகுதியில் பள்ளம்; தொடர் விபத்துகளால் பாதிப்பு
ADDED : டிச 17, 2025 06:08 AM

உடுமலை: உடுமலை - கொழுமம் ரோட்டில், ரயில்வே வழித்தடம் பகுதியில் இரு புறமும் காணப்படும் குழியால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக, பழநி செல்லும் பிரதான ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டில், எஸ்.வி., புரம் பகுதியில், ரயில்வே வழித்தடம் ரோட்டின் குறுக்கே அமைந்துள்ளது.
நகர பகுதியில் பல ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான வழித்தடமாக அமைந்துள்ளதால், தினமும் பல ஆயிரக்கணக்கானவர்கள் ரோட்டில் வந்து செல்கின்றனர்.
ரோட்டின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே வழித்தடத்தில், தண்டவாளங்கள் மற்றும் ஜல்லிகள் புதுப்பிக்கும் பணி நடந்தது.
இதற்காக ரோடு தோண்டப்பட்ட நிலையில், மீண்டும் ரோடு அமைக்காத நிலையில், இரு புறமும் தண்டவாளம் பகுதியில், ரோட்டில் மிகப்பெரிய பள்ளம் காணப்படுகிறது.
இதனால்,வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இரு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. மேலும், இரு புறமும், அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை மிக உயரமாக அமைந்துள்ளதால், மழை காலங்களில் வெள்ள நீர் வடிய வழியின்றி தேங்கி, விபத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, ரயில்வே தண்டவாளம் பகுதியில், ரோடு அமைக்கவும், உயரமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையை மாற்றி அமைக்கவும் வேண்டும்.

