/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த போராட்டம்
/
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த போராட்டம்
ADDED : ஜூலை 29, 2025 11:52 PM

அவிநாசி; அவிநாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தியும், தாய் சேய் நல விடுதியை திறக்க கேட்டும், மா.கம்யூ., சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மா.கம்யூ., ஒன்றிய குழு உறுப்பினர் தேவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கவுரிமணி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல், கட்டட கட்டுமான தொழிற்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய நிர்வாகிகள் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களால், அவசர சிகிச்சைகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக துவங்க வேண்டும்.
எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த பரிசோதனை, காசநோய் பிரிவு, ஐ.சி.யூ., வார்டு ஆகியவற்றை தேவையான கட்டமைப்பு வசதிகள் மற்றும் நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம் உள்ளிட்டவைகளை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.