/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாசுபட்ட பகுதி முதலிபாளையம் அறிவிக்க கோரி நாளை ஆர்ப்பாட்டம்
/
மாசுபட்ட பகுதி முதலிபாளையம் அறிவிக்க கோரி நாளை ஆர்ப்பாட்டம்
மாசுபட்ட பகுதி முதலிபாளையம் அறிவிக்க கோரி நாளை ஆர்ப்பாட்டம்
மாசுபட்ட பகுதி முதலிபாளையம் அறிவிக்க கோரி நாளை ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 29, 2025 05:16 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் சேகரமான குப்பைக்கழிவுகள், கடந்த பத்தாண்டுகளாக, முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டுள்ளது.
ஏறத்தாழ ஐந்து கி.மீ., சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவு கெட்டு போனது. சுற்றுச்சூழல் பாதிப்பு, சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியை மாசுபட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என, முதலிபாளையம் - நல்லுார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழு சார்பில் மாவட்ட நிர்வாகத்திடமும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, நாளை 30ம் தேதி, இந்த அமைப்பு சார்பில், திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் குமரன் நினைவிடம் முன், நாளை காலை 10:00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இழப்பீடு வழங்க வேண்டும்: சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதியை மாசுபட்ட பகுதியாக உடனடியாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில், மருத்துவ முகாம் நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சீரமைப்பு நடவடிக்கை தவிர கழிவு மேலாண்மை தொடர்பான புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளக் கூடாது. இதில் கட்சி சார்பற்று அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
- முதலிபாளையம் - நல்லுார்சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர்.:

