/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்ட குழுவினர்
/
நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்ட குழுவினர்
நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்ட குழுவினர்
நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்ட குழுவினர்
ADDED : ஜூலை 29, 2025 11:51 PM

அவிநாசி; அவிநாசியில் உள்ள நீர்வள ஆதாரத்துறை அலுவ லகத்தை அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்ட குழுவினர் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, போராட் டக்குழுவினர் கூறியதாவது:
நீர்வள ஆதாரத்துறையினர், 1,040 குளம் குட்டைகளுக்கு முழுமையாக தண்ணீர் சென்றடைந்ததாகவும் கூறுகின்றனர். ஆனால், நடுவச்சேரி, தொரவலுார், தெக்கலுார் பகுதிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகளுக்கு ஒரு வருடம் கடந்தும் தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இதுகுறித்து கேட்டால், யாரும் உரிய பதில் அளிப்பதில்லை.
எல் அண்ட் டி நிறுவனத்தினரிடம் கேட்டால் நீர்வள ஆதார துறையை கைகாட்டுகின்றனர். அவர்களிடம் கேட்டால், நெடுஞ்சாலைத்துறை பல இடங்களில் ரோடு பணிகளை செய்து வருகின்றனர். அதனால் குழாய் உடைந்து தண்ணீர் செல்வதில் தாமதம் என கூறுகின்றனர்.
கண்காணிப்பு பொறியாளர் திருமலைக்குமாரை சந்தித்து விவசாயிகள் உரிய விளக்கம் கேட்க சென்றால், அவரும் அலுவலகத்தில் இருப்பதில்லை. உடனடியாக 1040 குளங்களுக்கும் வரும் ஆக., 7ம் தேதிக்குள் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகளிடம் பேசிய நீர்வளத்துறையினர், 'உங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற உயரதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.