/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர் சங்க கொடிகள் போலீஸ் அகற்றியதால் மறியல்
/
மாணவர் சங்க கொடிகள் போலீஸ் அகற்றியதால் மறியல்
ADDED : ஆக 24, 2025 06:25 AM

திருப்பூர் : இந்திய மாணவர் சங்கத்தின், 27வது மாநில மாநாடு நேற்று முன்தினம் திருப்பூரில் துவங்கியது. முதல் நாள் ஊர்வலம், பொதுகூட்டம் நடந்தது. மாநில பிரதிநிதிகள் மாநாடு நேற்று செங்கப்பள்ளியில் துவங்கியது. இன்றும் நடக்கிறது. மாநில மாநாட்டையொட்டி திருப்பூர் நகரில் பிரதான ரோட்டில் பல இடங்களில் எஸ்.எப்.ஐ., கொடிகள் கட்டப்பட்டன.
திருப்பூர் வளர்மதி அருகே நொய்யல் பாலத்தில் கட்டப்பட்டிருந்த மாணவர் சங்கத்தின் கொடியை, மக்களுக்கு இடையூறாக உள்ளதாக கூறி போலீசார் நேற்று அகற்றினர். இதை கண்டித்த மாநாட்டு வரவேற்பு குழு நிர்வாகிகள் ஜெயபால், பாலன், மணிகண்டன், சம்பத் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படாமல், கொடியை அகற்றி ரோட்டில் வீசி சென்றதாக குற்றம்சாட்டினர். பின், கொடிகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் மறியல் காரணமாக, வளர்மதி பஸ் ஸ்டாப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.