/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசின் உதவி வழங்குங்க! உறவினர்கள் வலியுறுத்தல்
/
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசின் உதவி வழங்குங்க! உறவினர்கள் வலியுறுத்தல்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசின் உதவி வழங்குங்க! உறவினர்கள் வலியுறுத்தல்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசின் உதவி வழங்குங்க! உறவினர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 21, 2025 09:51 PM
உடுமலை; பாலப்பம்பட்டியை சேர்ந்த, பெற்றோர் இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு, அரசின் உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் வெற்றி, 6. ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்த இப்பள்ளி குழந்தைக்கு, பெற்றோர் இருவரும் இல்லாமல் உறவினரின் பாதுகாப்பில் இருக்கிறார்.
அதேபோல் இக்குழந்தையின் அண்ணன் திருமலைச்சாமி வெஞ்சமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இக்குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லாததால் பொருளாதார நிலையில் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அரசின் உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கவும் ஆட்கள் இல்லாமல், குழந்தைகள் வறுமையில் தவித்து வருகின்றனர். குழந்தைகள் முழுமையான கல்வி பெறுவதற்கு உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குழந்தைகளின் உறவினர்கள் கூறியதாவது:
இக்குழந்தைகளின் தாய் ஆறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்துவிட்டார். தந்தை ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது மூன்று வேளையும் உணவு வழங்க மட்டுமே எங்களால் முடிகிறது.
இக்குழந்தைகள் மட்டுமின்றி அவர்களுக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். பெற்றோர் இருவரையும் இழந்த இந்த மூன்று குழந்தைகளுக்கும் அரசு உரிய உதவிதொகை கிடைப்பதற்கு நடவடிக்கைளை துரிதப்படுத்தினால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
இடைநிற்றல் இல்லாமல் அவர்கள் கல்வி பெறுவதற்கும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.