/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
/
குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 09, 2025 10:05 PM

உடுமலை; நிலத்தடி நீர்மட்டம் உயர, குளங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க, குடிமங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை பிரதான சாகுபடி ஆக உள்ளது. இப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக கிராமக் குளங்கள் உள்ளன. குளங்களுக்கு பருவமழை காலத்தில் நீர்வரத்து கிடைக்கும்.
மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் தேவைக்காகவும், பி.ஏ.பி., பாசன கால்வாய்கள் வாயிலாக, குளங்களுக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம், விரைவில் துவங்க உள்ளது.
தற்பொழுது திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன் குளங்களுக்கு தண்ணீர் வழங்க, குடிமங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் தவிர்க்கப்படும். இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு குடிமங்கலம் வட்டார விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.