/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண சீருடை வழங்கல்
/
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண சீருடை வழங்கல்
ADDED : ஜூன் 05, 2025 11:57 PM
உடுமலை; குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரபட்டியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை கோட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் குழந்தைகளுக்கு வண்ண சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்கி பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 1,472 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு, கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் ஆறு வயது வரையிலுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இம்மையங்களில், குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், உணவு, ஊட்டச்சத்து மாவு, முன்பருவ கல்வி, செய்கை பாடல் கதை, விளையாட்டு கல்வி உபகரணங்கள் வாயிலாக அளிக்கப்படுகிறது,'' என்றார்.
இதில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் பத்மநாபன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.