/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
/
மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : அக் 22, 2025 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: குறிச்சிக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான சோளம், உளுந்து, மக்காச்சோளம் விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
உடுமலை வேளாண் துறை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான சான்று பெற்ற விதைகள், சோளம்- கோ.32, உளுந்து - விபிஎன்-8, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உடுமலை பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ளதால், விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

