/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்; பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் துவக்கினர்
/
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்; பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் துவக்கினர்
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்; பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் துவக்கினர்
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்; பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் துவக்கினர்
ADDED : அக் 22, 2025 10:47 PM
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி உற்சவ விழா நேற்று துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27ம் தேதி நடக்கிறது.
மடத்துக்குளம் அருகேயுள்ள பாப்பான்குளத்திலுள்ள ஞான தண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று காலை, 9:00 மணிக்கு, மங்கள இசையுடன் துவங்கியது.
விக்னேஷ்வர பூஜை மற்றும் யாக சாலையில் கலச ஆவாஹனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, சுவாமிக்கு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், பழச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மாலை ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வரும் 26ம் தேதி, 7:00 மணிக்கு, அம்மை, அப்பனை வழிபட்டு, வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 27ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு, சூரனை வதம் செய்து வெற்றி கொள்ளும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 28ம் தேதி, சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், தனி சன்னதியில் முருகப்பெருமான் எழுந்தருளி வருகிறார். இக்கோவிலில், முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது.
நேற்று, காலை, 6:30 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. தினமும், யாக சாலை பூஜைகள், சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன.
கந்த சஷ்டி விழாவில், 6ம் நாள், மதியம், 3:15 மணிக்கு, வேல்வாங்கும் உற்சவமும், 4:00 மணிக்கு, சுவாமி புறப்பாடு, சூரசம்ஹாரம், மாலை, 6:30 மணிக்கு, மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது.
28ம் தேதி, காலை, 10:30 முதல் 12:30 வரை, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
* உடுமலை போடிபட்டி முருகன் கோவில், ருத்ரப்பநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஸ்ரீ பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள, ஸ்ரீ குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், கந்த சஷ்டி உற்சவம் நேற்று சிறப்பு ேஹாம பூஜைகள், அபிேஷகம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
*சின்னபொம்மன் சாளை முருகன் கோவில் உள்ளிட்ட உடுமலை பகுதியிலுள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது.
* உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவுக்காக பக்தர்கள் காப்பு காட்டினார்கள். கோவிலில், முருகன் சன்னதியில், சிறப்பு அபிேஷகம் மற்றும் ேஹாமங்கள் நடத்தப்பட்டது.