/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிற்சி மருத்துவரை தாக்கிய மூவர் கைது
/
பயிற்சி மருத்துவரை தாக்கிய மூவர் கைது
ADDED : அக் 22, 2025 07:48 PM
திருப்பூர்: பயிற்சி டாக்டரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில், நேற்றிரவு பயிற்சி டாக்டர் கார்த்திக் முருகன் பணியில் இருந்தார். கோவில் வழியை சேர்ந்த தீபக், கார்த்திக் ஆகியோர், விபத்தில் காயமடைந்த நிலையில், அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
முதலுதவி வழங்கிய டாக்டர்கள், 'எக்ஸ்ரே' எடுக்க காத்திருக்குமாறு கூறியுள்ளார். சிறிது தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆத்திரம டைந்த தீபக், கார்த்திக்கின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர், அங்கு பணியில் இருந்த கார்த்திக் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கினர்.
அதிர்ச்சியடைந் த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை வளாகத்தில் இருந்த புறக்காவல் நிலைய போலீசாருக்கு தெரிவிக்க, போலீசார் டாக்டரை தாக்கியவர்களை பிடித்து விசாரித்தனர்.
டாக்டர் கார்த்திக் முருகன் புகாரில், தேவேந்திரன், தேவக்குமார் மற்றும் பாரதிராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.