/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நலத்திட்ட பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கல்
/
நலத்திட்ட பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கல்
ADDED : ஜூன் 25, 2025 09:39 PM

உடுமலை; ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு துவங்கி ஒரு மாதமாவதால், மாணவர்களுக்கான நலத்திட்ட பொருட்கள் ஒவ்வொன்றாக வழங்கப்பட்டு வருகிறது.
ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ண கிரையான்கள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமையாசிரியர் தாரணி பொருட்களை வழங்கினார்.
ஆசிரியர் கண்ணபிரான், எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான நோட்டுகளை மாணவர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது.