/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்
/
அரசு பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்
ADDED : ஜூலை 13, 2025 08:37 PM
உடுமலை; உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில், அரசுப்பள்ளிகளுக்கு நுாலகம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட பொருட்களை தமிழக அரசும் வழங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் தன்னார்வ அமைப்புகளும் பள்ளிகளுக்கு தேவையான உதவிகள், விளையாட்டு உபகரணங்களை கொடுத்து வருகின்றன.
இதன் வாயிலாக, மாணவர்களும் கல்வியிலும், பல்வேறு விளையாட்டிலும், முன்னேறவும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், தலைவராக போத்திராஜ், செயலாளர் கருணாநிதி, பொருளாளர் சத்தியலட்சுமி உள்ளிட்டோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதனை முன்னிட்டு, நேதாஜி மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணி, ரத்த தானம், கள்ளப்பாளையம், உடுக்கம்பாளையம் அரசு பள்ளிகளுக்கு, நுாலகம் அமைக்க அலமாரி, புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பெதப்பம்பட்டி அரசு பள்ளி ஹாக்கி அணி மாணவர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டது. கடந்தாண்டு தலைவர் குருசாமி, செயலாளர் சுப்ரமணியம் மற்றும் ரோட்டரி சங்கத்தின் சேவையை பாராட்டி, 22 விருதுகளை, ரோட்டரி கவர்னர் சுரேஷ் பாபு வழங்கினார்.
டாக்டர் மோகன் பிரசாத் உள்ளிட்டோர் பேசினர். சர்வதேச ரோட்டரி சங்க பங்களிப்புடன், உடுமலை வனப்பகுதியிலுள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.