sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம் வழங்கல்

/

சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம் வழங்கல்

சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம் வழங்கல்

சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம் வழங்கல்


ADDED : அக் 17, 2024 10:23 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : வேளாண் பொறியியல் துறை வாயிலாக, தானியங்கி விவசாய மின் மோட்டார் கட்டுப்படுத்தும் கருவி, புதிய மின்மோட்டார் அமைத்தல் மற்றும் சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகள் மின் மோட்டார்களை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில், 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு, 250 விவசாயிகளுக்கு இக்கருவி அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது.

மேலும், பழைய மின்மோட்டாரை மாற்றி, புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

தரிசு நிலங்களில் சிறு தானிய சாகுபடிக்கு உழவு மானியமாக அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ. 5,400 மானியம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள விவசாயிகள் உடுமலை, தாராபுரம், திருப்பூர் வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, செயற்பொறியாளர் ஜெயகுமார், 94432 43495, கார்த்திகேயன் உதவி செயற்பொறியாளர், 94437 51142, செல்வி, தாராபுரம் உதவி செயற்பொறியாளர், 79040 67799, உடுமலை உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணன், 96001 59870 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us