/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கி பெயரில் போலி விளம்பரம்: பொதுமக்களே உஷாரா இருங்க!
/
வங்கி பெயரில் போலி விளம்பரம்: பொதுமக்களே உஷாரா இருங்க!
வங்கி பெயரில் போலி விளம்பரம்: பொதுமக்களே உஷாரா இருங்க!
வங்கி பெயரில் போலி விளம்பரம்: பொதுமக்களே உஷாரா இருங்க!
ADDED : நவ 07, 2025 10:55 PM
திருப்பூர்: 'பாரத ஸ்டேட் வங்கி பெயரில் வெகுமதி (ரிவார்டு) தொகை தருவதாக சமூக ஊடகங்களில் வலம் வரும் போலி விளம்பரங்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பூண்டி நுகர்வோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதன் தலைவர் காதர்பாஷா கூறியதாவது:தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்ற வங்கிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த வங்கியின் அசல் 'லோகோ'வை பயன்படுத்தி, 7,500 ரூபாய் வெகுமதி தருவதாக கூறி, பலரது 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு, 'லிங்க்' வருகிறது. அது மோசடி செய்யும் நோக்குடன், 'சைபர்' குற்றவாளிகளால் அனுப்பப்படும் 'லிங்க்' என்பது, பலருக்கும் தெரிவதில்லை.விவரம் தெரியாத பனியன் தொழிலாளர்கள், பென்ஷனர்கள் என பலரும் இதனால் ஏமாற்றப்படும் சூழல் இருக்கிறது.
பாரம்பரியமிக்க வங்கியின் பெயரில் நடக்கும் இத்தகைய மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதுபோன்ற போலி விளம்பரங்கள் வலம் வருவதை தடுக்க வேண்டும் என, வங்கி நிர்வாகத்தினருக்கும், சைபர் கிரைம் போலீசாருக்கும் புகார் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

