/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்ட இன்னொரு பாறைக்குழி தடுத்த பொதுமக்கள்; மாநகராட்சி தவிப்பு

ADDED : மே 29, 2025 01:06 AM

அனுப்பர்பாளையம் ;திருப்பூர் மாநகரில் தினசரி 800 டன் குப்பை சேகரமாகிறது.
சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கென மாநகரில், இடவசதி இல்லை. இதனால், பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு குப்பை பாறைக்குழியில் கொட்ட செல்லும் இடமெங்கும், அங்குள்ள பொதுமக்கள் 'நிலத்தடி நீர் பாதிக்கப்படும், துர்நாற்றம் வீசும்' என குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சேகரமான குப்பைகள் பொங்குபாளையம் ஊராட்சி, காளம் பாளையம் பாறைக் குழியில் கொட்டப்பட்டு வந்தன.
அப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் 4வது வார்டு நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறை குழியில் கொட்டி வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் நேற்று மாலை 'குப்பையால் துர்நாற்றம் வீசும்' என குப்பை லாரியை தடுத்து நிறுத்தினர்.
இதனால் குப்பை கொட்டுவதை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர்.
தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம், துர்நாற்றம் வீசாதவாறு மண் போட்டு, மருந்து தெளிப்பதாக சமாதானம் பேசி வருகின்றனர்.