/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தையில் குடிநீர் வசதி பொதுமக்கள் கோரிக்கை
/
சந்தையில் குடிநீர் வசதி பொதுமக்கள் கோரிக்கை
ADDED : மே 26, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,; உடுமலை நகராட்சி சந்தை வாரம்தோறும் திங்கட்கிழமை நடக்கிறது. அப்போது, நுாற்றுக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் வருகின்றனர். ஆனால், மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லாததால், அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சந்தை முடிந்ததும், தேங்கும் காய்கறி கழிவுகள், குப்பை போன்றவை அகற்றப்படுவதில்லை. இவற்றை அகற்றவும், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி செய்து தர நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.