/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடையை அகற்றுங்க; பொதுமக்கள் கோரிக்கை
/
மதுக்கடையை அகற்றுங்க; பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 03, 2025 11:44 PM
உடுமலை; குறிச்சிக்கோட்டை பிரதான ரோட்டில் செயல்படும் மதுக்கடையை அப்புறப்படுத்த, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு: குறிச்சிக்கோட்டை - மூணார் பிரதான ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்குள்ள மதுக்கடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அதிகாலையில் சில்லிங் முறையில் மதுபானம் விற்பதும் தொடர்ந்து நடக்கிறது. மாலை நேரங்களில் டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு தாறுமாறாக வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் அவ்வழியாக செல்வதற்கு பாதுகாப்பில்லாமல் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு குறிச்சிக்கோட்டை மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். மேலும், டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த தாமதபடுத்தும் பட்சத்தில், போராட்டத்தில் ஈடுபடவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

