/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்மட்ட பாலம் அமையுங்க; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
உயர்மட்ட பாலம் அமையுங்க; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 04, 2024 10:12 PM
உடுமலை; குடிமங்கலம் அருகே, வீதம்பட்டி செல்லும் இணைப்பு ரோட்டில், உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமங்கலம் ஒன்றியம், நஞ்சேகவுண்டன்புதுார் கிராமத்தில் இருந்து பொம்மநாயக்கன்பட்டி வழியாக, வீதம்பட்டி செல்லும் கிராம இணைப்பு ரோட்டை அதிகளவு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோட்டில், உப்பாறு மழை நீர் ஓடை குறுக்கிடுகிறது. மழைக்காலத்தில், ஓடையில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, இணைப்பு ரோட்டில், போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால், நஞ்சேகவுண்டன்புதுார் உள்ளிட்ட பல கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஓடையின் மீது, உயர் மட்ட பாலம் கட்ட, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.