/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதை ஆசாமிகள் பொதுமக்கள் அச்சம்
/
போதை ஆசாமிகள் பொதுமக்கள் அச்சம்
ADDED : ஜன 28, 2025 05:16 AM
பல்லடம் :   பல்லடம் பஸ் ஸ்டாண்டில், நேற்று மாலை, இளைஞர்கள் சிலரும் போதை ஆசாமி ஒருவரும் மோதிக்கொண்டனர்.  பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பொதுமக்கள் கூறியதாவது:
சமூக விரோதிகள் மற்றும் போதை ஆசாமிகளின் நடமாட்டம் பஸ் ஸ்டாண்டில் அதிகம் உள்ளது.  தகாத செயல்கள், அடிதடி மோதல்களில் ஈடுபடுவது அதிக அளவில் நடக்கிறது. வேலை முடிந்து திரும்பும் மாலை நேரங்களில், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன் பஸ் ஸ்டாண்டில் கொலை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், பொதுமக்களுக்கும், பள்ளி கல்லுாரி முடிந்து செல்லும் மாணவ மாணவியருக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. மாலை நேரங்களில், பஸ் ஸ்டாண்டுக்குள் போலீசார் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

