/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லாங்குழி ரோட்டுக்கு தீர்வு பொதுமக்கள் மகிழ்ச்சி
/
பல்லாங்குழி ரோட்டுக்கு தீர்வு பொதுமக்கள் மகிழ்ச்சி
பல்லாங்குழி ரோட்டுக்கு தீர்வு பொதுமக்கள் மகிழ்ச்சி
பல்லாங்குழி ரோட்டுக்கு தீர்வு பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : மார் 29, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் அருகே, குண்டும், குழியுமாக இருந்த ரோட்டை, நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று சீரமைத்தனர்.
எஸ்.பெரியபாளையம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், பல இடங்களில் குழி ஏற்பட்டுள்ளது; இதன்காரணமாக, தொடர் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது; அதன் எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வாயிலாக, ரோடு சீரமைப்பு பணி நடந்தது; இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.