ADDED : பிப் 03, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம், பூலுவபட்டி ஏ.பி.எஸ்., அகாடமி மெட்ரிக் பள்ளி, ஏ.வி.எஸ்., நவீன் மருத்துவமனை ஆகியன இணைந்து ஏ.பி.எஸ்., அகாடமி பள்ளி வளாகத்தில் இலவச பொது நல மருத்துவ முகாமை நடத்தின. சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஏ.வி.எஸ்., நவீன் மருத்துவமனை டாக்டர் நவீன் தலைமையில் மருத்துவர் ராகுல் மற்றும் செவிலியர் குழுவினர் முகாமை நடத்தினர்.
ரோட்டரி சங்க தலைவர் சரவணக்குமார், செயலாளர் சசிகாந்த், முன்னாள் சங்கத் தலைவர் சுரேஷ்குமார், ஜனார்த்தனன், யோகேந்திரன், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் 185 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.

