/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்வாய் கட்டமைப்பு பொதுமக்கள் மனு
/
கால்வாய் கட்டமைப்பு பொதுமக்கள் மனு
ADDED : ஜூலை 08, 2025 12:36 AM

திருப்பூர்; திருமுருன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம், மகாலட்சுமி நகர் முதல் வீதி குடியிருப்புவாசிகள், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமாரிடம் வழங்கிய மனு:
மகாலட்சுமி நகர் முதல் வீதியில், நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க, நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எங்கள் வீதியில், 50 வீடுகள் கழிவுநீர் கால்வாய் கட்டுமான வசதி இல்லாமல் உள்ளன. நகராட்சி சார்பில் தற்போது அமைக்கப்படும் கால்வாய் வாயிலாக, வெறும், 9 வீடுகள் மட்டுமே பயன் பெறும்.ஏற்கனவே, வீதியில் உள்ள மெயின் ரோட்டில், சுமார், 40 மீட்டர் நீளத்துக்கு உள்ள கழிவுநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது; இதனால், அதனை மூடி வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது நகராட்சி சார்பில் அமைக்கப்படும் கால்வாயை, இந்த கால்வாயுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, உரிய முறையில் கள ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதி முழுக்க பயன்பெறும் வகையில், கால்வாய் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.