/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகனங்களை பழுதாக்கும் வேகத்தடை அமைச்சரிடம் பொதுமக்கள் மனு
/
வாகனங்களை பழுதாக்கும் வேகத்தடை அமைச்சரிடம் பொதுமக்கள் மனு
வாகனங்களை பழுதாக்கும் வேகத்தடை அமைச்சரிடம் பொதுமக்கள் மனு
வாகனங்களை பழுதாக்கும் வேகத்தடை அமைச்சரிடம் பொதுமக்கள் மனு
ADDED : ஜூலை 20, 2025 01:34 AM

பல்லடம் : வாகனங்களை பழுதாக்கும் வேகத்தடைகளை அகற்ற வலியுறுத்தி, சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையில், பல்லடம் - பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலை, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த ரோட்டில், புதிதாக அமைக்கப்பட்ட, 21 வேகத்தடைகள், வாகனங்களை பழுதாக்குவதுடன், விபத்து அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
இவற்றை அகற்றிவிட்டு, இங்குள்ள இணைப்புச் சாலைகளில், வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில், விபத்து அபாயம் உள்ளதாக கூறி, இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு, பொதுமக்கள் விழிப்புணர்வு நோட்டீஸும் வழங்கினர்.
நேற்று முன்தினம், இப்பகுதியில், வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாக, கொதித்தெழுந்த பொதுமக்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று, ஆய்வுப் பணிக்காக, பொள்ளாச்சி வந்த அமைச்சர் ஏ.வ.வேலுவை சந்தித்த சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள், வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை மனு அளித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'இந்த ரோட்டை பயன்படுத்தி வரும் நாங்கள்தான் அன்றாடம் பாதிக்கப்பட்டு வருகிறோம். முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை என, அனைத்து துறைகளிலும் மனு அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே, இன்று (நேற்று), பொள்ளாச்சி வந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். எங்களது குறைகளை கேட்ட அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வரவழைத்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அமைச்சர் உத்தரவின்படி வேகத்தடைகள் அகற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என்றனர்.
எம்.பி., ஆய்வு
சுல்தான்பேட்டையில் நடந்த பூமி பூஜை ஒன்றில் பங்கேற்க வந்த கோவை எம்.பி., கணபதி ராஜ்குமாரிடமும், வேகத்தடைகள் குறித்து, இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். பூமி பூஜை முடிந்ததும், வேகத்தடைகள் உள்ள பகுதியில் எம்.பி., கள ஆய்வு செய்தார். தானும், இது குறித்து அமைச்சரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக கூறினார்.