/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதாள சாக்கடை வசதி மனு கொடுத்த பொதுமக்கள்
/
பாதாள சாக்கடை வசதி மனு கொடுத்த பொதுமக்கள்
ADDED : மே 23, 2025 12:24 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், ஆனந்தா அவென்யூ, ஆனந்தா என்க்ளேவ், ஆனந்தா கிராண்ட் மற்றும் ஆனந்தா எக்ஸ்டென்சன் ஆகிய குடியிருப்புகள் உள்ளன.
இவற்றில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில், டிஸ்போஸல் பாயின்ட் இல்லாத காரணத்தால், கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், உறிஞ்சு குழிகளும் அமைத்துப் பயனில்லாத நிலை உள்ளது. இதனால் ரோட்டில் கழிவு நீர் சென்று பாய்வதும், பல இடங்களில் நிரந்தரமாக தேங்கி நிற்பதும் வழக்கமாக உள்ளது.
இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுவது மட்டுமே இதற்கான தீர்வாக எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர கோரிக்கை விடுத்து, கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் அப்பகுதியினர் நேற்று கமிஷனரிடம் மனு அளித்தனர்.