/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் இணைப்புகளுக்கு கட்டணம் குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
/
குடிநீர் இணைப்புகளுக்கு கட்டணம் குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
குடிநீர் இணைப்புகளுக்கு கட்டணம் குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
குடிநீர் இணைப்புகளுக்கு கட்டணம் குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 19, 2024 09:54 PM
உடுமலை : மடத்துக்குளம் பேரூராட்சியில், அம்ரூத் திட்ட குடிநீர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகையை குறைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் பேரூராட்சியிலுள்ள, 18 வார்டுகளில், 35 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
மத்திய அரசின் 'அம்ருத் 2.0' திட்டத்தின் கீழ், ரூ.24 கோடி மதிப்பில், புதிதாக குடிநீர் திட்ட குழாய்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க, இணைப்பு கட்டணமாக, ரூ.7 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழிகாட்டுதல் விதியில், ரூ.3 ஆயிரம் பொதுமக்கள் பங்களிப்பு தொகை செலுத்த அறிவுறுத்திய நிலையில், டெபாசிட் கட்டணம், ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, குடிசை வாழ் பகுதி மக்கள் குடிநீர் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, குடிநீர் இணைப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும், என தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.