/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையை சுற்றிச்செல்வதா? பொதுமக்கள் திடீர் மறியல்
/
சாலையை சுற்றிச்செல்வதா? பொதுமக்கள் திடீர் மறியல்
ADDED : டிச 08, 2024 02:39 AM
பொங்கலுார்: கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட் டது. ரோட்டின் குறுக்கே டிவைடர் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால், 'தேசிய நெடுஞ்சாலையை கடக்க சுற்றிச் செல்ல வேண்டும். எங்கள் ஊருக்கு செல்வதற்கு வழி விட வேண்டும்' என்று கூறி பொங்கலுார் ஒன்றியம், மஞ்சப்பூரைச் சேர்ந்த பொதுமக்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அவிநாசிபாளையம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அஞ்சலி பேச்சுவார்த்தை நடத்தினர். 'ஒரு மாத காலத்துக்கு டிவைடர் அமைப்பதில்லை; விபத்து அதிகரித்தால் வழியை அடைத்து விடுவோம்' என்று தெரிவித்தார். சமாதானம் அடைந்த அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.